• Mar 26 2023

எனக்கும் அப்படியொரு சம்பவம் நடந்தது...முதல் முறையாக வாய் திறந்த பிரபல சீரியல் நடிகை..!

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

திரையுலகில் அட்ஜஸ்மென்ட் நடக்கிறது ஆனால் அதை வெளியே சொல்ல பலரும் தயங்கிய நிலையில் கடந்த சில வருடங்களாக நடிகைகள் வெளிப்படையாக கூறி  வருகின்றனர். சினிமாவில் தான் குணச்சித்திர நடிகைகள் தொடங்கி கதாநாயகி வரை அட்ஜஸ்ட்மெண்டில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள் என்று பார்த்தால் சின்ன திரையிலும் அதே தான்.

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யப்படுவதாக பல நடிகைகள் கூறி  வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து பிரபலம் அடைந்த ஒரு நடிகையும் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல.. பல வருடங்களாக மீடியா உலகில் நடித்து வரும்  நடிகை தேவி பிரியா தான்.


இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்மென்ட் குறித்து  மனம் திறந்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது சமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறி டீசன்டாக ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார் நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் நீங்கள் பெங்களூருக்கு வர முடியுமா என கேட்டார். சரி வருகிறேன் என்றேன் எப்பொழுது வருவீர்கள் என கேட்டார் நிகழ்ச்சியில் நடக்கும் அன்று காலை வந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன் என்றேன்.



இல்லை நீங்கள் நாளைக்கே வரவேண்டும் என்றார் எதற்காக நாளைக்கு வரவேண்டும் என கேட்டேன். இல்ல மேம் ஒரு என். ஆர். ஐ நபர் பெரிய பணக்காரர்.. அவர் கொடுக்கும் இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமென சொன்னார் நான் அதெல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என சொன்னேன் சரி என போனை வைத்து விட்டார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும்..என்னை தொடர்பு கொண்ட அந்த நபர் உங்கள் பி ஆர் ஓ அல்லது மேனேஜர் எண் இருந்தால் கொடுங்கள் நான் அவர்களிடம் பேசுகிறேன் என்றார் எனக்கு புரிந்து விட்டது உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது ஆனால்  நீங்கள் நினைக்கும் பெண் நான் இல்லை என்றேன் உடனே சாரி மேம் இனிமேல் உங்களிடம் இப்படி கேட்க மாட்டேன் எனக் கூறி நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே பேசுவேன் என அந்த நபர் கூறியதாக  பேட்டியில் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement