• Dec 01 2023

யாருமே எதிர்பாராத வகையில் வெளியேறப்போவது இவரா... ஷாக்கில் ரசிகர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எப்போ என்ன நடக்கும், எப்பிடி நடக்கும் என்று யாராலுமே கண்டு பிடிக்க முடியாத ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஏனெனில் இன்று சிரித்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தை தற்போது காட்டத் தொடங்கி உள்ளார்கள். அமைதியாக இருந்தவர்கள் கூட சண்டை போடத் தொடங்கி விட்டார்கள். எதிர்பாராத திருப்பங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "இன்று யார் வெளியேறுவார்" எனப் போட்டியாளர்களிடம் கேட்கின்றார். அதற்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீம் தான் எனக் கூறுகின்றனர்.

ஆனால் மைனா மட்டும் நிவாஷினி தான் வெளியேறுவார் எனக் கூறுகின்றார். இவ்வாறாக எதிர்பாராத பல திருப்பங்களுடன் இன்றைய ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது. யார் வெளியேறுகின்றார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement

Advertisement