• Mar 29 2024

நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய பிரபல தொகுப்பாளர் - கடுமையான காயத்துடனும் வழக்குப் பதிவு செய்த போலிஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல தனியார் யூடியூப்பில் தொகுப்பாளராக இருந்து தற்பொழுது சன்டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வருபவர் தான் நிக்கிலேஷ். இவரை பிரபலங்கள் பலரும் நிக்கி என்று தான் அழைப்பதுண்டு. இந்த நிலையில் இவர் நேற்று இரவு சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ராஜேஷ் என்பவருக்கும் நிக்கிக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் நிக்கிக்கு முகத்திலும், கண் புருவத்திலும் வீக்கம் ஏற்பட்டது. அதேபோல் ராஜேஷுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதையடுத்து தொகுப்பாளர் நிக்கி மீதும், ராஜேஷ் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறரை தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் தொகுப்பாளர் நிக்கி தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல தொகுப்பாளர் ஒருவர் சாலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் புரசைவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கும், ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement