• Mar 28 2024

மீனாவின் தங்கை திருமணத்தில் ஏற்படவுள்ள புதிய குழப்பம்- ஜீவாவுக்கு காத்திருக்கும் பெரிய அவமானம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் மாறி வருவதோடு ஜீவா தனது குடும்பத்திற்கு எதிராக மாறிவிட்டார்.இதனால் எப்போது தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து மாமியார் வீட்டுக்கு போகப் போகிறாரோ என்று தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சாய் காயத்திரி இந்த சீரியல் தற்பொழுது வித்தியாசமாக நகர்ந்து செல்வதால் எனது எதிர்காலத்தை எண்ணி இந்த சீரியலில் இருநத விலகுகின்றேன் என அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்பொழுது இந்த சீரியலில் இருந்தும் விலகி விட்டார்.


இந்த நிலையில் மீண்டும் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா இணைந்துள்ளார். இந்த எப்பிஷோட் இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. இப்படியான நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு மொய் வைக்கும் ஆலோசனை போய் கொண்டிருக்கிறது. 

ஜீவா அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து மொய் வைப்பார்கள் என்று நினைத்து கொண்டிருக்க, கதிர், கண்ணன் ஆகியோர் தனியாக மொய் வைக்கின்றனர். இதனால் ஜீவாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement