• Apr 20 2024

அம்மாவின் வாழ்க்கை கிச்சினுக்குள் மட்டும் தான் இருக்கிறது-மேடையில் உருக்கமாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முக்கியமான நடிகை தான்  ஐஸ்வர்யா ராஜேஷ்.இவர் தற்பொழுது மலையாளத்தில் ஹிட்டான, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் 

இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனால் இப்படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று வருகிறார்இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஐஸ்வர்யா படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்


மலையாளப்படத்தை ரீமேக் செய்யப்போகிறோம் என இயக்குநர் கண்ணன் சொன்னதும் முதலில் தயக்கமாக இருந்தது. ரீமேக் என்றாலே நாம் கம்பேர் செய்துகொண்டே இருப்போம். நானும் அப்படித்தான் செய்தேன். குழப்பமாக இருந்தது.

பின்னர் 2, 3நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். அவர் கிச்சனுக்கு செல்வார். வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையேதான் செய்துகொண்டிருப்பார். ஆனால் நான் இதனை கவனித்ததே இல்லை. 


பெண்களின் முழு வாழ்க்கையும் சமையல் அறையிலேயே கழிந்து விடுகிறது. மலையாளத்தில் நடித்த நிமிஷாவில் நடிப்பில் பாதி நடித்திருந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்


Advertisement

Advertisement

Advertisement