• Apr 19 2024

தளபதி 67படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது- விஜய்யின் கதாபாத்திரம் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய்யின் வாரிசு படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் விரைவில் விக்ரம் படத்தை போலவே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார்.அதன்படி இப்படத்தின் அறிவிப்பு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.

விக்ரம் படத்திற்கு எப்படி அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்ததோ, அதே பாணியில் தளபதி 67ன் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.


இந்த வீடியோவில் விஜய்யின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர். இதனால் வருகிற ஜனவரி 26க்காக தான் ரசிகர்கள் தற்போது காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement