• Apr 19 2024

தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விடிவி கணேஷ் கற்றுக் கொடுத்த பாடம்.. வாரிசு சக்சஸ் மீட்டில் நடந்த சம்பவம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், விடிவி கணேஷ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது வாரிசு படம். மேலும் இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அத்தோடு இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், படத்தில் வழக்கம்போல காமெடி, ஆக்ஷன் என கலந்துக் கட்டி தன்னுடைய ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார் விஜய்.இப் படத்தில் பாடல்களிலும் தன்னுடைய சிறப்பான நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆயினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தபோதிலும் படம் வசூலில் பட்டையை கிளப்பி தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினருக்கு நடிகர் விஜய் ரகசியமாக சக்சஸ் பார்ட்டி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் மட்டுமே வாரிசு படம் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறுஇருக்கையில்  படத்தின் சக்சஸ் மீட்டும் தற்போது நடத்தப்பட்டுள்ளது. சென்னை ஈசிஆரில் ஒரு ரெசார்ட்டில் இந்த சக்சஸ் பார்ட்டி நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சக்சஸ் பார்ட்டியில் ராஷ்மிகா மந்தனா, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், விடிவி கணேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி, தன்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்ததாகவும், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் அவரை சந்தித்த தான், படம் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும் அவர் படத்தின் சக்சஸ் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ், தயாரிப்பாளர் தில் ராஜூவின் தமிழ் குறித்து நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார்.அத்தோடு தமிழக மக்களிடம் அது இது என்று பேசக்கூடாது என்றும் அவங்க இவங்க என்றுதான் பேச வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தில் ராஜூவிற்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement