• Sep 22 2023

ஜெயிலர் திரைப்படத்திலிருந்து லீக்கான முக்கிய காட்சி- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படமானது தமிழகத்தில் 9 மணிக்கே ரிலீஸாகவுள்ளது.ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையெ பாராட்டைப் பெற்று வருகின்றது.இப்படத்தைப் பார்த்தவர்கள் முதல் பாதி ஓவர். ஒரு தரமான கம்பேக் படம். நெல்சன் பிண்ணிட்டாப்ல. அனிருத் எங்கிருந்து யா உனக்கு மட்டும் இவ்ளோ வெறி வருது என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.


இப்படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக முத்துவேல்பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 24 வருடத்திற்கு பின் நடித்துள்ளார்.தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மற்ற மாநிலத்தில் காலை 6 மணிக்கே படம் வெளியாகிவிட்டதால், ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் தலைவர் எண்டரி உள்ளிட்ட சில காட்சிகளை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

அதில், ரஜினி ஷோபாவில் அமர்ந்து இருக்க, பின்னணியில் தலைவரு நிரந்தரம் என்ற பாடல் ஒலிக்கிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சியோடு ரஜினியை பார்க்க. கூலாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு, டைகர் ஆர்டர் என்கிறார். இந்த மாஸ் சீன் தான் இடைதான் இடைவேளைகாட்சியாக வருகிறது. தற்பொழுது ஒரு காட்சி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement