• Apr 23 2024

துணிவு பட கட்-அவுட்டுக்கு இத்தனை இலட்சத்திற்கு மலர் மாலையா? மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே அதிகமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம் . இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள், துணிவு படத்துக்காக வைத்துள்ள பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு மாலை தயார் செய்ய ரூ.7 லட்சம் செலவு செய்துள்ளனர்.

மாஸ் ஹீரோவான நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கே திரையிடப்பட உள்ளதால், அதனை  கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 



அஜித்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்  பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள், துணிவு படத்திற்காக பிரம்மாண்டமாக ரூ.7 லட்ச பெறுமதியுள்ள மாலை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். திரையரங்கு முன் வைக்கப்பட உள்ள அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு அந்த மாலையை அணிவித்து அழகுபார்க்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement