• Apr 24 2024

பொது இடத்தில் போட்டு வந்த அரைகுறை உடை... உட்கார முடியாமல் சங்கடப்பட்ட பிரபல நடிகை....!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கன்னட சினிமாவில் 'கில்லி' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தொடர்ந்து தமிழில் 'யுவன்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இதன்பின்பு 'தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.


தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு அதனைத் தொடர்ந்து பெரிதாக வாய்ப்புக்கள் எதுவும் வரவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழில் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகளாக காணாமல் போனார். 


எனினும் அதன்பின் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இவ்வாறாக தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர் ஓவர் கிளாமர் காட்டி நடித்து ஹிந்தி பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி அங்கு பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். 


மேலும் சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படத்தின் இந்தி ரீமெக்கான Cuttputlli என்ற படத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படமானது சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. 

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வந்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அந்தவகையில் பிரஸ் மீட் ஒன்றில் குட்டையான ஆடையணிந்து வந்திருந்த ரகுல் ப்ரீத் சிங் மேடையில் உட்காருவதில் சங்கடப்பட்டுள்ளார். 

இவ்வாறு இவர் குட்டையான ஆடையணிந்திருந்தமையினால் சங்கடப்பட்ட வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement