• Apr 18 2024

போதைக்கு அடிமையான பெண்ணாக மாறிய பிரபல நடிகை… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ பதிவு…! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியாகிய கிருத்திகா இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'காளி' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தினைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தினைத் தொடர்ந்து 'பேரழகி, தேவதாஸ் பிரதர்ஸ்' போன்ற படங்களிலும் கமிட்டாகி நடித்திருந்தார்.

அடுத்ததாக தற்போது நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்து வரும் மற்றுமோர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இந்த படமானது ஹரூன் என்பவரின் இயக்கத்தில் அமைந்திருக்கின்றது. அத்தோடு கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் கேரெக்டர் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு பெண் ஆகும். அந்த வகையில் இப்படத்தில் இவர் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாகவே வலம் வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது ஷில்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் இட்டிருக்கும் பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிக்கும் படியான காட்சிகளும் இடம்பெற்று வெளியாகி உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் அதே ஸ்னீக் பீக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு இதன் ஒவ்வொரு காட்சியையும் என்ஜாய் பண்ணி நடித்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ஷில்பா ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அக்காட்சியானது போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும், தயவு செய்து இவ்வாறு நடிக்க வேண்டாம் எனக்கூறி அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவரின் இந்தப் பதிவிற்கு சமூக வலைத்தளங்களிலும் பெருமளவான எதிர்ப்பை கிளப்பி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement