• Apr 19 2024

வாரிசு படத்திற்காக அஜித்தின் துணிவு பட வாய்ப்பு தவறவிட்ட பிரபல நடிகர்..அவர் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. துணிவு படத்தை நள்ளிரவு 1AM மணிக்கும், வாரிசு படத்தை அதிகாலை 4AM மணிக்கும் திரையிட திட்டமிட்டுள்ளனர்.


வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் ஷாம். இவர் வாரிசு படத்தில் கமிட்டான சில நாட்களிலேயே துணிவு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.


ஆனால், வாரிசு படத்திற்காக கமிட் செய்த அதே தேதியில் துணிவு படத்திற்கும் கால்ஷீட் கேட்டுள்ளார் இயக்குனர் எச். வினோத். இதனால், நடிகர் ஷாம் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement