• Oct 09 2024

தனத்திற்காக குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எடுத்த முடிவு- பாசமழையில் நனையும் Pandian Stores குடும்பம்- பரபரப்பான Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் குடும்பம் எல்லோரும் ஒன்றாக இணைந்ததோடு எல்லோரும் புது வீட்டுக்குச் சென்று விட்டனர்.

அத்தோடு ஐஸ்வர்யா போட்ட வீடியோவால் தனத்திற்கு கான்சர் என்ற விஷயமும் மூர்த்திக்கு தெரிந்து விட்டது. இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தனம் துாங்கிட்டு இருக்கும் போது மூர்த்தி தனத்தையே பார்த்துக் கொண்டிருப்பதோடு குழந்தை அழ தானே எழும்பி குழந்தையை துாங்க வைக்கின்றார்.

பின்னர் விடிந்ததும் தனத்தை ஒரு வேலையும் செய்யக் கூடாது என்று சொல்லுவதோடு தனம் சாப்பிடும் சாப்பாட்டையே அனைவரும் சாப்பிடப் போவதாகவும் சொல்ல எல்லோரும் சம்மதிக்கின்றனர். அத்தோடு கடையையும் ஜீவாவையே பார்த்துக் கொள்ளுமாறு மூர்த்தி சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement