ஆட்டினைப் பலி கொடுத்த விவகாரத்தில் ரஜினிகாந்த்தை கைது செய்யுமாறு காவல் துறையில் புகார்

132

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்பொழுதும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்னும் படம் உருவாகி வருகின்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானதையடுத்து ரசிகர்கள் 50 அடி உயரத்திற்கு இந்த போஸ்டரை அமைத்து ஆடு ஒன்றை இழுத்து வந்து, பொதுவெளியில் பலநூறு பேர் முன்னிலையில் பட்டாக்கத்தியால் ஆட்டு தலையை வெட்டி உடல் கிடந்து துடிதுடிக்க அந்த உடலை தூக்கி அப்படியே அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தை போஸ்டரில் அடித்தனர் என்பது வைரலானது.

மேலும் வெறிபிடித்த இந்த ரசிகர்களின் செயல் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஜினி இது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறார். இதனால் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்திருக்கின்றார்.

மேலும் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்மேலும் இது போன்ற சம்பவங்கள் கர்நாடகாவில் தான் அதிகம் நிகழும். இந்த நிலையில் தமிழ் நாட்டில் இப்படி நடந்ததால் பலரும் தமது வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.