• Apr 19 2024

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 80கால கட்ட வில்லன் நடிகர்…வெளியானது புதிய ருவிஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் கடந்த வாரம் வெளியாகி அதுவும் ஹிட்டடித்துள்ளது.

விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருகின்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒருவர், உங்களுடைய படத்தில் மன்சூர் அலி கான் எப்போது நடிப்பார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ' விரைவில்' என்று தெரிவித்துள்ளார். இதற்குமுன் லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் கூட முதன் முதலில் நடிக்கவிருந்தது மன்சூர் அலி கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement