• Apr 25 2024

'பொன்னியின் செல்வன்' படத்தின் 50வது நாள்.. நடிகர் விக்ரம் வெளியிட்ட வசூல் விபரம்..குவியும் வாழ்த்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன்-1 படத்தின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ள நிலையில்  ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிரபல இயக்குநர்களில்  ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022)  பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

அத்தோடு பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும்  சிறப்பாக நடித்துள்ளனர். அத்தோடு நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

பொன்னியின் செல்வன் படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில்  வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஇருக்கையில்  இன்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளிவந்து 50 வது நாளை முன்னிட்டு நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படம், உலகளவில் 500 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement