• Apr 25 2024

'துணிவு' படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்தோடு இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது.அத்தோடு  வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'துணிவு' திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர்.


'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறுஇருக்கையில் , 'துணிவு' திரைப்படத்தில் 50-வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழு இறங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



Advertisement

Advertisement

Advertisement