“5 திருக்குறள் எப்படி மனப்பாடம் பண்றது”.. அக்‌ஸராவினால் வெடித்த சண்டை..நடந்தது என்ன?

413

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஒக்டோர் ஆரம்பமாகி பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து எதிர்பாராத விதமாக திடீரென வெளியேறினார் .அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் இசைவாணி வெளியேறி இருந்தார்.இவ்வாறு இருக்கையில் அபிஷேக் உட்பட மற்றும் ஒரு நபர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் பள்ளி காலத்தை நினைவூட்டும் “கனா காணும் காலங்கள்” டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.

இதில், அக்‌ஷரா பிக்பாஸ் வீட்டில் ஆவேசமாக கத்தி, பொருட்களை தூக்கி போட்டு உடைக்கக் கூடிய புரோமோ வெளியாகியிருந்தது.இது ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின்னணியில் அக்‌ஷராவை சிபி கடுமையான கட்டுப்பாட்டுடன் நடத்தியது தான் காரணம் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயம், அதுதான் தனக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் என சிபி அக்‌ஷராவிடம் பின்னர் தெரிவித்திருந்தார்.

எனினும் உண்மையில் அக்‌ஷராவுக்கு ராஜூ, திருக்குறளில் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ராஜூ, தமிழாசிரியர் என்பதால் அவர் சொல்லும் திருக்குறளை அக்‌ஷரா உள்வாங்கிக்கொண்டு 5 திருக்குறளை மனப்பாடமாக கூறவேண்டும். அப்படி 5 திருக்குறளை கூற வேண்டுமென்பதில் சிபி கறாராக இருந்திருக்கிறார்.

இதனையடுத்து டென்ஷனான அக்‌ஷரா, கடுப்பாகி, பொருட்களை உடைத்தெறிந்துவிட்டு, டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார்.

மேலும் அங்கு சென்றவர். “நான் சாப்பிடவில்லை .. குளிக்கவில்லை.. இதையெல்லாம் எப்போது செய்வது? ஓவராக பண்ணுகிறார்கள்! எனக்கு தமிழே தெரியாது.. நான் எப்படி திருக்குறளைப் படித்து 5 திருக்குறளை மனப்பாடமாக சொல்ல முடியும்? சில விஷயங்கள் வரும் என்றால் வரும். வராது என்றால் வராது. அதற்கு நேரம் ஆகும்” என்று கடுமையாக பேசத் தொடங்கினார்.

அவரை அபினய் மற்றும் ஐக்கி சமாதானப்படுத்த சென்றனர். அதன் பின்னர் ராஜூ சென்று அக்‌ஷராவிடம் பேசப் போனார். ஆனால் அனைவரையும் அக்ஷரா பேசாதீர்கள் போய்விடுங்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டார். எனினும் அதற்குள் சிபி வந்து ராஜூவை, வந்துவிடுங்கள். அவரை விடுங்கள் என்று சொல்லி அழைத்து வந்துவிட்டார்.

மேலும் முன்னதாக ராஜூ, திருக்குறளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று கண்டிஷன் போட்ட்டார். அப்போது அக்‌ஷரா, “சரி நான் டாஸ்க் முடிந்து 4 தெலுங்கு வார்த்தை கற்றுத்தருகிறேன். உடனடியாக திரும்பி சொல்ல வேண்டும்!” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிக்பாஸ் 5வது சீசனில் 52வது எபிசோட்டில் நடந்தது என்பதை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்யவும்…..