• Oct 09 2024

39வயதான பிரபல நடிகர் உயிரிழப்பு... காரணம் இதுவா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே திரையுலகில் தொடர் உயிரிழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமோர் நடிகரும் உயிரிழந்துள்ளார். அதாவது 'கேம் ஆப் தோரோன்ஸ்' என்ற தொடரில் நடித்து புகழ்பெற்ற 39வயதான நடிகர் டேரன் கெண்ட் காலமானார். 


இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர் 2008-ஆம் ஆண்டு வெளியான 'மிரர்ஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும் இவரின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது எம்மி விருந்து வென்ற கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடர் தான். 


மேலும் இறுதியாக அவர் டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன் என்ற தொடரில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது கடந்த 2012-ஆம் ஆண்டு சன்னி பாய் என்ற படத்திற்காக வான் டி என்ற விருதினையும் வென்றார். இந்நிலையில் கடுமையான தோல் மற்றும் சரும பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டேரன் கெண்ட்டின் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement