மோகன் லால் செய்த செயலால் 3 கோவில் ஊழியர்கள் பணி நீக்கம்- சர்ச்சசையை ஏற்படுத்திய விடயம்..!

193

மலையாள மொழியில் சூப்பர் ஸ்ரார் என்று அழைக்கப்படுபவர் தான் மோகன்லால்.இவருக்கென்று தனி ரசிகள் பட்டாளமே உள்ளது என்று தான் கூறவேண்டும்.இவர் மலையாளம் மட்டும் அல்ல தமிழிலும் பல படங்கள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் மோகன்லால் பற்றிய சில விடயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டுவருகின்றது.அதாவது தற்பொழுது எங்கு பார்த்தாலும் கொரோனா தாக்கம் எவரையும் விட்டு வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.அதற்கு பல கட்டுப்பாடுகளுக் பல விதிகளும் விதித்துக்கொண்டே தான் உள்ளனர்.

இதனையொட்டி கேரளா கோயில்களில் குறைந் எண்ணிக்கையான பக்தர்கள் அனுமதிக்கின்றார்கள்.அதிலும் குருவாயூர், சபரிமலை போன்ற கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே குருவாயூர் கோயிலில் வளாகத்துக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் வளாகத்துக்குள் வாகனத்தில் செல்ல முடியாது என்று அறிவித்திருந்தார்கள். இவ்வாறு இருக்கையில் நடிகர் மோகன்லால் சில தினங்களுக்கு முன் தகது மனைவியுடன் தரிசனம் செய்ய சென்றுள்ளார்.அவரது வாகனம் கோவில் வாசல்வரை வந்து உள்ளது.

மேலும் இவரை அனுமதித்த கோயில் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். அதோடு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தடையை மீறி நடிகர் மோகன்லால் வாகனத்தை அனுமதித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாகம் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உள்ளார்கள். மேலும், இதுதொடர்பாக அவர்கள் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. தற்போது தகவல் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.