• Mar 29 2024

படம் வெளியாகி 3 நாள்கள் ஓவர்- பிச்சைக்காரன் 2 திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விஜய் ஆண்டனி. முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார்.


இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் பிகிலி பாடல் வீடியோ வெளியானது. ஏழைகளை ஏமாற்றி பணத்திமிரில் ஆடுபவர்களை இனி பிகிலி என்று அழைக்கலாம் என்று விஜய் ஆண்டனி பேசி தொடங்கிய அந்தப் பாடல் இணையத்தில் படு ட்ரெண்டானது. இதனையடுத்து படமானது கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் அதன் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 'பிச்சைக்காரன் 2' உலக அளவில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement