• Sep 21 2023

25 வயது இளம் சீரியல் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இளம் சீரியல் நடிகர் பவன் சிங், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். 25 வயதே ஆகும் இவர், ஹிந்தியில் சில சீரியல்கள் நடித்து வருவதால், மும்பையில் வாழ்ந்து வந்தார்.

 இந்நிலையில் இவருக்கு நேற்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதே ஆகும் பவன் சிங், உடலை விசாரணைக்கு பின்னர் மும்பை போலீசார் அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

இவரின் திடீர் மறைவு ஹிந்தி மற்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பவன் சிங் சில தமிழ் சீரியல்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் பல ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இளம் வயதிலேயே மாரடைப்பு வரும் அளவுக்கு அவருக்கு அப்படி என்ன நடந்தது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement