லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார்.அத்தோடு சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் லியோ படத்தை குறித்து புதிய தாவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் 2000 மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனம் ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.
Listen News!