• Nov 29 2022

அடுத்தடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் 2 படங்கள் ..என்ன சொல்ல முடியும்..ஆதங்கத்தை வெளிப்படுத்திய சசிக்குமார்..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது  என தகவல் வெளியாகி உள்ளது.

சசிகுமாருடன் ஹரிப்ரியா, விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குறித்து பேசிய சசிகுமார்,

 “காமன் மேன் என்றுதான் இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைத்தோம்.அதன்  பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘நான் மிருகமாய் மாற’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அத்தோடு  ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று தான் கூற வேண்டும்.


இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். இந்த படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். அத்தோடு இந்த படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என தெரிவித்தார்.

இதேபோல் சசிகுமார் நடிப்பில் நவம்பர் 25-ஆம் தேதி காரி எனும் திரைப்படம் வெளியாகிறது.அத்தோடு  சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.அத்தோடு  சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார்.இப் படத்தின் கதாநாயகியாக புதிய வரவான  மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.  சசிகுமாருடன் மோதும்  வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி  நடித்துள்ளார். அத்தோடு  முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பல நடிகர்கள்  நடித்துள்ளனர்.


மேலும் இப்படி அடுத்தடுத்த வாரங்களில் நான் மிருகமாய் மாற, காரி ஆகிய படங்கள் வெளியாவது குறித்து பேசிய சசிகுமார்,  “3 மாதங்களுக்கு முன்பே தயாரிப்பாளரிடம் இதுகுறித்து கூறினேன். பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றேன். தெலுங்கு படங்களில் எல்லாம் பார்த்தீர்களேயானால், வெவ்வேறி ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும்போதே, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். இங்க அவங்க பேசிக்கொள்ளவும் தயாராக இல்லை. ஈகோதான் இருக்கும். வேறென்ன செய்ய முடியும். அது என்னை பாதிக்காது. ஆனால் நானும் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன் என்பதால், இதை கூறுகிறேன். அத்துடன் இரண்டுமே என் படம். அதனால் தயாரிப்பாளர்களும் பாதிக்க கூடாது. ஆனால் அது அவர்களின் விருப்பம். அதுக்கு மேல என்ன சொல்ல முடியும்?” என்று ஆதங்கத்தை தெரிவித்தார்.