• Apr 17 2024

1 மில்லியன் லைக்ஸ் பெற்ற 'சில்லா சில்லா' பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,  தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். மேலும் இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.  போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா நேற்று மாலை அதிரடியாக வெளிவந்தது.


இந்நிலையில், நேற்று மாலை வெளிவந்த இப்பாடல் இதுவரை 1 மில்லியன் லைக்ஸை அள்ளி youtube சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 24 மணி நேரத்திலும் இன்னும் பல லட்சம் லைக்ஸ்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement